அஜீத் விவகாரத்தில் ஜாகுவார் தங்கத்திற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத்.
இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில் ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார்.
இதனால் அஜீத் ரசிகர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் காரை உடைத்துவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் தமிழ் உணர்வாளர்கள் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜாகுவார் தங்கம்.
இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
மேலும், அவர் நேற்றைய தாக்குதலின் போது காயமுற்ற ஜாகுவாரின் மனைவியை நலம் விசாரித்தார்.
நடிகர் சங்கம் நோட்டீஸ்
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை ஜாகுவார் சந்தித்து இச்சம்பவம் பற்றி மனு கொடுத்தார். அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் அஜீத் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
ஜாக்குவார் தங்கம் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். சங்க உறுப்பினர் என்ற வகையில் அவரது மனுவை நடிகர் சங்கம் பரிசீலித்தது.
ஜாக்குவார் தங்கம் குற்றச்சாட்டு பற்றி அஜீத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் தயாராகி வருகிறது. இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
அதற்கு அஜீத் பதில் அனுப்பியதும் அதை பரிலீசித்து நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா?
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,
’’தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?
அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்’’என்று கூறியுள்ளார்.
'மாத்தி யோசி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. மருந்துக்கு கூட ஒரு நடிகையும் மேடையில் இல்லை. ஆனாலும் கலந்து கொண்ட விவிஐபிகள் உழைப்பு, போராட்டம், வெற்றி என்ற நம்பிக்கைகளை பற்றி பேசிக் கொண்டிருந்ததால் அலுப்பு தட்டாமல் விழா நகர்ந்தது.
தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கிறார்கள் கார்த்திக்குகளும், கார்த்திகாக்களும். பருத்திவீரன் கார்த்தி, பழைய நடிகர் கார்த்திக், கொல கொலயா முந்திரிக்கா கார்த்தி என்று ஏகப்பட்ட குழப்பம். மகளிர் அணி மட்டும் மட்டமா? திண்டுக்கல் சாரதி கார்த்திகா, து£த்துக்குடி கார்த்திகா, ராதா மகள் கார்த்திகா என்று ரவுண்டு கட்டுகிறார்கள். இந்த பெயர் குழப்பம் திருச்சி நகர இன்டலிஜென்ஸ் போலீஸ் வட்டாரத்தையை குழப்பி குட்டையை கலங்கடித்துவிட்டதாக தகவல்.
மனசுல 'குட்டி'யூண்டு இடம் கூட தேவையில்லை. என் ஒன் சைட் லவ்வை ஃபீல் பண்ணா போதும்! இப்படி தான் விரும்பும் பெண்ணிடம் தீர்மானமாக சொல்லும் காதலன்! அடித்து, துவைத்து, துடிக்க துடிக்க தொங்கப் போட்ட தமிழ்சினிமாவின் 'முக்கோண' காதலில் இது வேற ரகம்!
